Yaethi Vacha Nerupinile

Yaethi Vacha Nerupinile Song Lyrics In English


பாடலாசிரியர் : இளையராஜா

ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல

மனம் மெழுகுதானே இங்கே உருகி உருகி ஓடாதோ உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ

ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி

எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே

ஒரு கணம்தான் எரிவதது தினம் தினமும் தொடர்வதது தொடர்ந்திடதான் விரும்புவது விரும்பிடதான் தொடர்கிறது

சுடச்சுடச் சேர்ந்தாலும் பிரிந்திடக் தாங்காது குளிர்ந்திட நேர்ந்தாலும் பிரிந்திடக் கூடாது கட்டில் எதற்கு மெத்தை எதற்கு பத்திக் கொள்ளுமே

ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல


மனம் மெழுகுதானே இங்கே உருகி உருகி ஓடாதோ உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ

காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே

மனித இனம் முழுவதற்கும் இயற்கை தந்த பொதுவுடைமை மனப்பசியா உடற்பசியா இனப்பசியா துணைப்பசியா

கேள்வியில்லை பதிலுமில்லை கேட்பதற்க்கு யாருமில்லை இரண்டும் இல்லை ஒன்றுமில்லை இணைவதற்கு தடையுமில்ல இன்பம் முழுதும் கொட்டிக் கிடக்கு அள்ளிக் கொள்ளவா

ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல

மனம் மெழுகுதானே இங்கு உருகி உருகி ஓடாதோ உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ

இருவர் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்தமெழுகுவர்த்தி