Yauvaname En Yauvanme

Yauvaname En Yauvanme Song Lyrics In English


பாடகர்கள் : ஏ பி கோமளா மற்றும் கே ராணி

இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்

யௌவனமே என் யௌவனமே அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே யௌவனமே என் யௌவனமே

அழகினிலே என் அழகினிலே ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே அழகினிலே என் அழகினிலே

தவயோகி மனம் மாறி தடுமாறவே தவயோகி மனம் மாறி தடுமாறவே தளிர் போலே இளம் மேனி ஒளி வீசுதே எந்தன் யௌவனமே என் யௌவனமே அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே யௌவனமே என் யௌவனமே


கலைவாணர் மலர் தூவி கவி பாடவே கலைவாணர் மலர் தூவி கவி பாடவே எழில் வீசும் விழியாலே மொழி பேசுதே எந்தன் அழகினிலே என் அழகினிலே ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே அழகினிலே என் அழகினிலே

இளமை இல்லையெனில் அழகேது நாம் இன்பம் அடையவே இயலாது இளமை இல்லையெனில் அழகேது நாம் இன்பம் அடையவே இயலாது

அழகின்றி யௌவனம் உயர்வாகுமா அழகின்றி யௌவனம் உயர்வாகுமா அதனாலே பயன் ஏதம்மா

இருவர் : எழிலோடு இணையாக புது வாலிபம் எழிலோடு இணையாக புது வாலிபம் வளமாக வளர்ந்தோங்க வழி தேடுவோம் என்றும் அழகுடனே நம் யௌவனமே அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே! அழகுடனே நம் யௌவனமே