Yei Ilaiya Nilave

Yei Ilaiya Nilave Song Lyrics In English


ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே நாளைய நிலவும் நீதான் மாறும் உலகில் வாழும் வாழ்வில் சோகம் எல்லாம் வீண் தான்

சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே ஏய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

காதோரம் கேட்கும் ரீங்காரம் எல்லாம் காதலி உன் சுவாச சத்தம் நீங்காமல் என்னை தூங்காமல் செய்யும் நீதானே என் காதல் சொர்க்கம்

உன் விழியின் ஸ்பரிசம் எல்லாம் உயிர் வரையில் உரசுதடி என் உயிரின் சுவாசமெல்லாம் உன் வழியே வீசுதடி

இந்த பருவம் பறந்து போவதற்குள் இந்தக் கனவு கலைந்து போவதற்குள் நான் பிறந்த காரணத்தை சொல்லிவிடு

சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே




கண்மணி உந்தன் புன்னகை எல்லாம் கண்ணுக்குள் படம் பிடித்து வைத்தேன் உன் இதழ் சிந்தும் ஓசைகள் எல்லாம் உயிருக்குள் ஒலிப்பதிவு செய்தேன்

உண்ணாமல் உறங்காமல் உயிர்த்திருக்கும் வழிக் கண்டேன் உன் நிழலாய் நான் மாறி உன்னோடு வாழ்கின்றேன்

உன்னைத் தேடி என்னைக் கண்டுக் கொண்டேன் ரெக்கையின்றி விண்ணை தொட்டுவிட்டேன் சித்தமெங்கும் சிற்பமாக உனை வடிப்பேன்

சொல்லாமல் என்னைக் கொல்லாதே ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே ஆங்கண்ணாலே என்னை கிள்ளாதே ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே ஏய் ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே நாளைய நிலவும் நீதான் மாறும் உலகில் வாழும் வாழ்வில் சோகம் எல்லாம் வீண்தான்

கண்ணீரில் காலம் தள்ளாதே ஏய் நிலவே காலங்கள் போனால் வராதே ஹோய் மேகங்கள் வானம் ஆகாதே எந்நாளும் சோகங்கள் வாழ்க்கை ஆகாதே