Yengi Yengi Vaduthey |
---|
பசுத்தோலைப் போர்த்தியுள்ள வேங்கை போல நான் பாசம் கொண்ட மனிதர் வாழக் கண்டதாலே ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம் அலை போலவே இன்று ஆடுதே வீணே
ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம் அலை போலவே இன்று ஆடுதே வீணே ஏங்கி ஏங்கி வாடுதே
எண்ணியதொன்று நடந்தது ஒன்று எண்ணியதொன்று நடந்தது ஒன்று கண்ணும் குளமாகி அதனாலே இன்று கண்ணும் குளமாகி அதனாலே இன்று தன்னிலை மாறி தாமரை மேலே தன்னிலை மாறி தாமரை மேலே தண்ணீர்த் துளி போலே தடுமாறி நின்று தண்ணீர்த் துளி போலே தடுமாறி நின்று
ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம் அலை போலவே இன்று ஆடுதே வீணே ஏங்கி ஏங்கி வாடுதே
கண்களை நம்பி காதலும் கொண்டு கண்களை நம்பி காதலும் கொண்டு இன்பம் கனவாகி பெருந்துன்பம் கண்டு இன்பம் கனவாகி பெருந்துன்பம் கண்டு வஞ்சகம் வாழும் பூமியின் மேலே வஞ்சகம் வாழும் பூமியின் மேலே சஞ்சலம் இனியென்றும் துணையானதாலே சஞ்சலம் இனியென்றும் துணையானதாலே
ஏங்கி ஏங்கி வாடுதே என் மனம் அலை போலவே இன்று ஆடுதே வீணே ஏங்கி ஏங்கி வாடுதே