Aavarame Devarame

Aavarame Devarame Song Lyrics In English


ஆண் : ஆவாரமே தேவாரமே ஆவாரமே தேவாரமே என் அக்கா பெத்த பூவாரமே என் அக்கா பெத்த பூவாரமே

பெண் : ஆவாரமோ தேவாரமோ ஆவாரமோ தேவாரமோ உன் அக்கா பெத்த பூவாரமோ உன் அக்கா பெத்த பூவாரமோ

உன் காலோடு கொலுசாட நீயாடும் போது பெண் : பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம் ஆண் : புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு புல்லரிச்சா சத்தமிடு ஆண் : ஆஹாஆவாரமே தேவாரமே ஆஹாஆவாரமே தேவாரமே

ஆண் : ஆகாயமே ஆபாசம்தான் வெக்கம் எல்லாம் வேலி வேஷந்தான் பெண் : சேலையில்லா நட்சத்திரம் செவ்வானத்தில் முத்துச்சரம்

ஆண் : இந்திரன இழுத்து வந்து இன்பமெல்லாம் கத்துக் கொடு பெண் : மந்திரத்தில் ஏங்க வச்சு மன்மதன வாங்கி விடு

ஆண் : ஆங்தத்தி தத்தி நீ நடந்தா தாங்கதம்மா என் மனசு தானாக தரமோ தேன் முத்தங்கள் பெண் : நானாக தருவேன் தேன் முத்தங்கள் ஆண் : ஆஹா ஆவாரமே தேவாரமே ஆஹா ஆவாரமே தேவாரமே

ஆண் : சந்திரனும் முகம் பார்க்க சாயங்காலம் தலைக் குனிய பெண் : நந்தவனப் பூ விரியும் நாலு பக்கம் தேன் சிதறும்


ஆண் : அந்தி நேரம் முத்தம் சிந்தி ஆசைத் தீர காத்தடிக்கும் பெண் : பூஜை செய்ய பூப்பறிச்சா பூவுக்குள்ளே ஊத்தெடுக்கும் ஆண் : அடி தாலியென்ன வேலி என்ன தாண்டி வரும் வேளையிலே தானாக தருமோ தேன் முத்தங்கள் பெண் : நானாக தருவேன் தேன் முத்தங்கள்

ஆண் : ஆஹா ஆவாரமே தேவாரமே ஆஹா ஆவாரமே தேவாரமே என் அக்கா பெத்த பூவாரமே என் அக்கா பெத்த பூவாரமே

பெண் : ஆவாரமோ தேவாரமோ ஆவாரமோ தேவாரமோ உன் அக்கா பெத்த பூவாரமோ உன் அக்கா பெத்த பூவாரமோ

உன் காலோடு கொலுசாட நீயாடும் போது பெண் : பாலாடை மேலாடை பறந்தோடும் நேரம் ஆண் : புல்லாங்குழலுக்கு முத்தம் கொடு பெண் : புல்லரிச்சா சத்தமிடு

ஆஹாஆவாரமே தேவாரமே ஆஹாஆவாரமோ தேவாரமோ