Achamae Agandruvidu

Achamae Agandruvidu Song Lyrics In English

அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு

அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு

உடம்பு என்ன விறகா நான் உணர்ச்சி இழந்த சருகா உடம்பு என்ன விறகா நான் உணர்ச்சி இழந்த சருகா

காதல் என்பது தவறா நான் கல்லில் செய்த சுவரா

அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு

தேக்கமடைந்து கிடக்கின்றேன் ஊக்கமிழந்த வாழ்க்கையிலே படுக்கை மேலே சிதறுகிறேன் பாறையில் கொட்டிய பால் போலே

துய்க்காத என் இதழில் துப்பி தொலையேனோ தூண்டாத என் இதயத்தை தோண்டி எறியேனோ பாராத என் அழுகை பாயில் புதைப்பேனோ தீராத என் காதல் தீயில் எரிப்பேனோ

முன்னோர் பொதியை சுமப்பேனோ இல்லை இன்னோர் விதியை படைப்பேனோ முன்னோர் பொதியை சுமப்பேனோ இல்லை இன்னோர் விதியை படைப்பேனோ

அச்சமே அகன்றுவிடு மடமே மடிந்துவிடு நாணமே நகர்ந்துவிடு பயிர்ப்பே பறந்துவிடு

சாத்திர கைதியாகின்றேன் சாதி படைத்த சிறைகளிலே மங்கையாக நான் பிறந்தேன் மலையில் முட்டிய நதி போலே

ஆப்பிரிக்கா காட்டில் நான் அணிலாய் பிறப்பேனோ அட்லாண்டிக் கடலோடு ஆர மீனாவேனோ மலையாள மலையில் நான் மணிக்கிளியாவேனோ மனித பிறவியற்று மனம் போல் வாழ்வேனோ

கூட்டு புழுவாய் மரிப்பெனோ இல்லை பட்டுபூச்சியாய் பறப்பேனோ கூட்டு புழுவாய் மரிப்பெனோ இல்லை பட்டுபூச்சியாய் பறப்பேனோ