Ennaval -Sathyaprakash Dharmar

Ennaval -Sathyaprakash Dharmar Song Lyrics In English


ஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆஅ
பாடாத பாடல் ஒன்று
தேவாரம் ஆக கண்டேனே
தேடாத காதல் இன்று
தோளோடு சாய கண்டேனே

பூமாலை சூடிக்கொண்டு
மனமேடை மேலன்று
மௌனத்தில் பேசிகொண்டு நின்றாயே
பொன்மாலை ஆகும் முன்னே
உயிரோடு உறவாடி
மொத்தத்தில் நீயும் என்னை வென்றாயே

அன்பே வீசும் தென்றலை போலே
வாசல் தேடியே வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ
பேசும் ஓவியம் போலே
பார்க்கும் என்னை நீ ஈர்த்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ

வானில் வானவில் போலே
வாழ்வின் வண்ணமாய் வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ
ஊனில் ஓர் உயிர் போலே
நீயும் என்னிலே சேர்ந்தாயே வந்தாயே ஹோ ஓ ஓஒ ஹோ

நீ பார்க்கும் பார்வை
தீராத போதை
உன் கண்ணில் கண்டேன் புதிய பாதை
நீ பேசும் வார்த்தை
தேன் ஊரும் பாஷை
உன் சொல்லில் கேட்டேன் இனிய கீதை


இமைகள் மூடும் நேரத்தில் பெண்ணே
விழியில் வந்தாடுவாய்
இதயம் போடும் தாளத்தில்
எனதுயிரை பந்தாடுவாய்

புதுமை பூக்கும் தேகத்தில் பெண்ணே
இளமை கொண்டாடுவாய்
பருவம் தீரும் காலத்தில்
இணைபிரியா துனையாகுவாய்

அன்பே நீரில் தாமரை போலே
நாளும் நெஞ்சிலே பூத்தாயே
பூவின் வாசனை போலே
நீயும் உன்னையே தந்தாயே

காதல் தேவதை போலே
நீ என் நேரிலே நின்றாயே ஹோ ஊ ஓஒ ஹோ
காற்றில் மெல்லிசை போலே
நீ என் மூச்சிலே வந்து சேர்ந்தாயே
நெஞ்சில் நின்றாயே
என்னை வென்றாயே