Idhu Sangeetha Thirunalo

Idhu Sangeetha Thirunalo Song Lyrics In English




இது சங்கீத
திருநாளோ புது சந்தோஷம்
வரும் நாளோ ரதி நம் வீட்டில்
பிறந்தாளோ சிறு பூவாக
மலர்ந்தாளோ

சின்ன சின்ன
அசைவில் சித்திரங்கள்
வரைந்தாள் முத்த மழை
கன்னம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு
நடை நடந்தாளே

இது சங்கீத
திருநாளோ புது சந்தோஷம்
வரும் நாளோ ரதி நம் வீட்டில்
பிறந்தாளோ சிறு பூவாக
மலர்ந்தாளோ

கைகளில் பொம்மைகள்
கொண்டு ஆடுவாள் கண்களை
பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ்
பாடுவாள்

தோள்களில்
கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை
தேடுவாள் அங்கும் இங்கும்
துள்ளி ஓடுவாள்

பூவெல்லாம் இவள்
போல அழகில்லை பூங்காற்று
இவள் போல சுகமில்லை இது
போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை

இது சங்கீத
திருநாளோ புது சந்தோஷம்
வரும் நாளோ ரதி நம் வீட்டில்
பிறந்தாளோ சிறு பூவாக
மலர்ந்தாளோ



நடக்கும் நடையில்
ஒரு தேர்வண்ணம் சிரிக்கும்
அழகில் ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும்
ஒரு காவியம்

மனதில் வரைந்து
வைத்த ஓவியம் நினைவில்
நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்

இவள் போகும்
வழியெங்கும் பூவாவேன்
இரு பக்கம் காக்கின்ற
கரையாவேன்

இவளாடும்
பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற
தாயாவேன் எப்போதும்
தாலாட்டுவேன்

இது சங்கீத
திருநாளோ புது சந்தோஷம்
வரும் நாளோ ரதி நம் வீட்டில்
பிறந்தாளோ சிறு பூவாக
மலர்ந்தாளோ

சின்ன சின்ன
அசைவில் சித்திரங்கள்
வரைந்தாள் முத்த மழை
கன்னம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு
நடை நடந்தாளே

இது சங்கீத
திருநாளோ புது சந்தோஷம்
வரும் நாளோ ரதி நம் வீட்டில்
பிறந்தாளோ சிறு பூவாக
மலர்ந்தாளோ