Iruvathu Vayathu Varai Duet

Iruvathu Vayathu Varai Duet Song Lyrics In English

ஆஆஆஆ ஆஹ்ஆஆஹ்ஆஆஹ்ஆ ஆஆஆஆ

இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன்

உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ

பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே

அன்னையின் அரவணைப்பை மறந்தேனே தந்தையின் அறிவுரையை மறந்தேனே கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன் வீட்டின் முகவரியும் மறந்தேனே

நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம் அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம் நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு கிச்சு கிச்சு மூட்டும் போதும் வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே

இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன்

முத்தத்தை கவிதை என ரசிப்போமே கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து பாத சுவடுகளை இணைப்போமே

நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம் நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம் வரும் காலம் எல்லாம் காதல் என்றால் நம்மை பற்றி உலகம் சொல்ல அன்பே அன்பே நாமும் இணைப்போமே