Kangal Rendum Vandu Niram

Kangal Rendum Vandu Niram Song Lyrics In English


கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் கலையே வடிவாய் வருவாள் அவளங்கம் தங்க நிறம் கலையே வடிவாய் வருவாள் அவளங்கம் தங்க நிறம்

கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம்

விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி மண்ணில் நடந்து வந்ததுபோல்

ஆஅஆஅஆ

விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி மண்ணில் நடந்து வந்ததுபோல் வண்ண மலர் மாலை கொண்டு வாழ்வினிலே ஆசை கொண்டு வந்திடுவாள் நாணம் கொண்டு மணமகளும் நானே யென்று வாலிபரை அழகில் வென்று வாட்டிடுவாள் சபையில் நின்று

கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் கலையே வடிவாய் வருவாள் அவளங்கம் தங்க நிறம்

கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம்

மோகத் தென்றலில் ஆடும் கூந்தல் மேகத்தோடு சிநேகம்

ஆஅஆஅஆஅ


மோகத் தென்றலில் ஆடும் கூந்தல் மேகத்தோடு சிநேகம் குறியாகப் பாய்ந்திடும் நாணப் பார்வைகள் வீரன் கணையிலும் வேகம்

நளின நடை அன்னம் போலே நெளியும் இடை மின்னல் போலே ஆடை கொடி பின்னல் போலே அன்பு மொழி கன்னல் போலே நெஞ்சினிலே நேசத்தாலே நீந்திடுவேன் மீனைப் போலே

அங்கம் யாவும் தங்க நிறம் ஆசை உள்ளம் சங்கு நிறம் அழகே வடிவாய் வரும் மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம் அங்கம் யாவும் தங்க நிறம் ஆசை உள்ளம் சங்கு நிறம்

அழகு விருந்தெனை அடைய நினைத்திடும் ஆண் மகனும் எவரோ அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும் அளவு தெரிந்தவரோ

பகைவரிடம் பல்லைக்காட்டித் தளபதியாய் வந்தவர் வேண்டாம்

பாவையரை அருகில் வைத்து பார்த்து ருசி கண்டவர் வேண்டாம்

கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட கண்கள் விரைந்திடுதே இளமை குலுங்கிடும் இவரை மணந்திட இதயம் விரும்பிடுதே ஆஅஆஅஆஅ

அங்கம் யாவும் தங்க நிறம் ஆசை உள்ளம் சங்கு நிறம் அழகே வடிவாய் வரும் மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம் அங்கம் யாவும் தங்க நிறம் ஆசை உள்ளம் சங்கு நிறம்