Oh Lilly Oh Lilly

Oh Lilly Oh Lilly Song Lyrics In English


ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே வாழ்க்கையில் வேதனை தாங்கலையே ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே

அருவாமனைப் போல் அறுக்கிற பொண்ணு மனைவியா அமைஞ்சாடா அதனாலே ஊத்திக்கிறேன் போதைய ஏத்திக்கிறேன் இருவர் : தேவதை கூட்டத்திலே சோகத்த ஆத்திக்கிறோம்

ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே வாழ்க்கையில் வேதனை தாங்கலையே

ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே

உலக உருண்டைய பாரு மூணு பக்கமும் நீரு தன்னைத்தான் சுத்துது பூமி காரணம் தண்ணி சாமி

ஆமைய கலைப்பது போல மனதை கலைப்பாள் பெண்ணே நிரந்தரம் எவளும் இல்ல உணர்ந்து கொள் இல்லை தொல்ல

துள்ளி துள்ளி சின்னப் பொண்ணு குதிக்குது அது இடுப்புல உண்டியல குலுக்குது தள்ளிச் சென்று இளமைய அளக்குது என் மனசுல தீக்குச்சிய ஒரசுது

ஓ நண்பா ஓ நண்பா ஓ நண்பா வாழ்க்கையில் ஆனந்தம் வா நண்பா நீ மனமென்னும் சிறை விட்டு வா நண்பா

ஓ லில்லி ஓ லில்லி ஓ லில்லியே வாழ்க்கையில் வேதனை தாங்கலையே


ஓ மில்லி ஓ மில்லி ஓ மில்லியே ஊத்திக்க ஊத்திக்க நீ மில்லியே

வாழ்க்கை வீதிகள் தோறும் கொட்டி கிடக்குது அழகு மலைகளின் தலைகளின் மேலே கொட்டிடும் பௌர்ணமி அழகு

உனது துணைவியின் அழகு உயிரில் உறைந்திடும் அழகு நோய் நொடி என்று நீ சாய்ந்தால் நெற்றியில் வருடிடும் அழகு

இல்லறத்தில் இன்பம் துன்பம் இருக்குது அது இதயத்தில் பூச்செடி வளர்க்குது இமயத்தில் கொடி கட்ட உனக்கது தேவைப்படும் வலிமையை கொடுக்குது

ஓ நண்பா ஓ நண்பா ஓ நண்பா போதை விட்டு பாதை மாறி வா நண்பா புது உலகத்தை படைத்திட வா நண்பா

ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே ஆனந்தம் அழைக்குது வா மல்லியே ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே போதையில் மிதப்பது சரியில்லையே

பச்சைக்கிளி உறவுக்கும் வெட்டுக்கிளி உறவுக்கும் பேதமுண்டு தெரியாதா தறிக்கெட்டு நீ நடந்தால் வாழ்க்கையும் இனிக்காது தடாகத்தில் தீப்பிடித்தால் தாமரை சிரிக்காது

ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே ஆனந்தம் அழைக்குது வா மல்லியே ஓ மல்லி ஓ மல்லி ஓ மல்லியே போதையில் மிதப்பது சரியில்லையே