Vaadipatti Melamada |
|---|
ஹேய் ஹே ஹேஏஏ
ஹேய் ஹேய் ஹேஏஏஏ
வாடிப்பட்டி மேளமடா
வருச நாடு கேட்குமடா
கொட்டு சத்தம் கேட்கையிலே
கூடல் விட்டு போகுமடா
கல்யாண வீடா
இல்லாட்டி காதுகுத்து வீடா
கட்சி மாநாடா ஓட்டு தேடி
வாடிப்பட்டி வாடா
வாடிப்பட்டி மேளம் கேட்டா
வச்ச செடி பூக்குமடா
க ர்ப்பத்துல உள்ள புள்ள
கைய தட்டி ஆடுமடா
சுதியும் வேணாம்டா எங்களுக்கு
சுரமும் வேணான்டா
ஒரு தாளக் கட்டுக்குள்ள அடிக்கிற
சங்கீதம்தான்டா
நாலு எழுத்து கத்ததில்ல நாங்க
ராகம் படிச்ச வித்வான் இல்ல
அப்பன் ஆத்தா போட்ட பிச்ச
சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே
ஹோய் அந்தக்கால வாத்தியம்தான்
ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே
வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா
கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்
