Putham Pudhiyadhu

Putham Pudhiyadhu Song Lyrics In English


புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே

விழி பூக்களில் பூத்தது காதல் இதன் வித்தைகள் எத்தனை நாவல் இது வாலிப நூலகமாகும் நாம் கற்றது கையளவு ஆகும்

புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே பூவே



விண்வெளியில் வெண்முகிலில் சித்திரம் தீட்டீயது யாரோ விந்தைகளில் தந்தை இது, இதுதான் கடவுளின் ஊரோ



பொன்முகிலின் புன்னகையில் என் மனதில் கார்காலம் புல்வெளியில் மின்மினிகள் கண் நிறையும் பனிக் கோலம்

மாலை நேர சோலைகளை மேடை போடுங்கள் மவுனம் கூட காதலரின் மேள தாளங்கள்

புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே

விழி பூக்களில் பூத்தது காதல் இதன் வித்தைகள் எத்தனை நாவல் இது வாலிப நூலகமாகும் நான் கற்றது கையளவு ஆகும்


புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே பூவே



புது நதியா மது நதியா ஒளி நதியா உன் கண்கள் இள நதியா வளர் நதியா கிளை நதியா கன்னங்கள்



கார்த்திகையா மார்கழியா காற்றில் பனி நம்மை வாட்டும் கை அணையும் மெய் அணையும் காதல் சுகமது மூட்டும்

மோக முல்லை பாடுவதே ராக ராகங்கள் முத்துமாலை ஆடுவதேன் ராஜ யோகங்கள்

புத்தம் புதியது முத்தம் இனியது பூவே இளம் பூவே நித்தம் கனியது நெஞ்சம் உருகுது பூவே இளம் பூவே